சித்த மருத்துவ பல்கலை. மசோதா; ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: சித்த மருத்துவ பல்கலை. மசோதாவிற்கு ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநரின் கருத்தை கேட்பது அவசியம் என்பதால் அவரது கருத்து கேட்கப்பட்டது. ஆனால் ஆளுநர் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement