தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நான்கு நாள் பயணமாக ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்

மீனம்பாக்கம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென 4 நாள் பயணமாக ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர். பின்னர் டெல்லியில் இருந்து வரும் 23ம் தேதி மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

Advertisement

புதுடெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர் மோதல் காரணமாக, சுதந்திர தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக உள்பட கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய்யின் தவெகவும் புறக்கணித்து விட்டன. இந்நிலையில், புதுடெல்லிக்கு 4 நாள் பயணமாக செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கு தங்கியிருக்கும் நாட்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல்வேறு அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement