தமிழக ஆளுநரின் விடுதலை திருநாள் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது: ஜவாஹிருல்லா அறிக்கை
சென்னை: தமிழக ஆளுநரின் விடுதலை திருநாள் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
'விடுதலை திருநாள் என்பது ஜனநாயகம், கூட்டாட்சி, இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றின் விழுமியங்களுக்கு மீண்டும் உறுதி மொழி ஏற்பதற்கான ஒரு சிறப்பான நாள். ஆனால், அண்மைக் காலங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் செயல்பாடுகளும், கருத்துக்களும், இந்த விழுமியங்களுக்கு முரணானதாக அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் தேவையற்ற மோதல்களை அவர் உருவாக்கி வருகிறார்.
மாநில அரசின் அதிகாரத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகச் செயல்பாடுகளையும் தொடர்ச்சியாகச் சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதால். அவரது தேனீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது' என தெரிவித்துள்ளார்.