ஆளுநரின் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்
சென்னை: வழக்கம்போல ஆளுநரின் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சுதந்திர நாள் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி வழக்கம்போல ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்ததற்காக விசிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.