கவர்னருடன் மோதல் எதிரொலி பாஜவுக்கு முதல்வர் ரங்கசாமி கெடு: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
தொடர்ந்து கோரிமேட்டில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 45 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது முதல்வர் ரங்கசாமி, தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. நான் சொல்வதை கேட்டு வந்தால், இருவருக்கும் நல்லது. இல்லாவிட்டால் தேர்தலில் நாம் கரைசேர மாட்டோம், கூட்டணி கப்பல் கவிழ்ந்து விடும். கோப்புகளின் மீது தன்னிச்சையாக முடிவெடுத்தால், அதில் வரும் சிக்கல்கள் துணைநிலை ஆளுநருக்கானது அல்ல, நமக்குத்தான். இன்னும் 3 மாதம் பார்க்கிறேன், உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னை விட்டுவிடுங்கள். அப்போது என்னை யாரும் கேள்வி எழுப்பக் கூடாது. எல்லாவற்றையும் அவரிடம் (துணைநிலை ஆளுநர்) சொல்லுங்கள். இப்போதே சரி செய்ய பாருங்கள்’ என தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட நிர்மல்குமார் சுரானா, பாஜ அமைப்பு செயலாளர் சந்தோஷ், தங்களிடம் பேசுவார். அவரிடமும் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து புறப்பட்டு சென்ற பாஜ மேலிட பொறுப்பாளர், ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரங்கசாமி தெரிவித்த கருத்துகளை அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதன்மூலம் ரங்கசாமி முழுமையாக சமாதானம் அடையவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், முதல்வருடன் கருத்து வேறுபாடு இருப்பதாக தோன்றவில்லை என கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்து உள்ளார்.