தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசுப்பணிகளில் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடங்கள் அடையாளம்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பங்களிப்பை பெரிதும் உயர்த்தும் வகையிலும், அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் 119 அரசு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016ன் படி, “Persons with Benchmark Disabilities” எனப்படும் குறிப்பிட்ட விகிதத்தில் இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஏற்றதாக கருதப்படும் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

குறிப்பாக, கனிமவளம், சட்டம், கூட்டுறவு, ஊராட்சி - நகராட்சி, போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலா, வேளாண், தகவல் தொழில்நுட்பம், உள்துறை, நிதி நிர்வாகம், சுகாதாரம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் உள்ளன. இதில் மேலாளர் முதல் பாதுகாவலர் வரை பதவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்ச மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் (Benchmark Disability Certificate) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கருதப்படுகின்றன.

Advertisement