நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியீடு
சென்னை: நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரர் பெயரில் பட்டா வழங்கப்படும். 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியருக்கு அதிகாரம் தந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.