அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
Advertisement
இந்நிலையில் “விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசு வாதம் சரியானது தான்.
தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2011 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
Advertisement