சென்னை: உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளின் மாணவ - மாணவிகள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20.6.2025 அன்று தொடங்கி நடந்து வருகிறது. விண்ணப்ப பதிவின் கால அவகாசம் 31ம் தேதி (நேற்று முன்தினம்) யுடன் முடிவடைந்ததால், மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணாக்கர்களின் முதுநிலை படிப்பின் நலன் கருதி, இந்த ஆண்டு முதுநிலை மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்ப பதிவு 1.8.2025 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.31.7.2025 வரை விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு 11.8.2025 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.8.2025 அன்று முதல் தொடங்கி சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு வகுப்புகள் 20.8.2025 அன்று முதல் தொடங்கும்.