அரசு மரியாதையுடன் சிபு சோரன் உடல் தகனம்
02:14 AM Aug 06, 2025 IST
நெம்ரா: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன்(81) டெல்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவரது ஜார்கண்டில் உள்ள அவரது சொந்த கிராமமான நெம்ரா கிராமத்துக்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது.
அங்கு, காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், முழு அரசு மரியாதையுடன் சிபு சோரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.