அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்த நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.