ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்தால்தான் கூட்டணி: கிருஷ்ணசாமி நிபந்தனை
அம்பை: நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி மாநாடு குறித்து பரப்புரை மேற்கொண்டார். கல்லிடைக்குறிச்சியில் புதிய தமிழகம் கட்சி கொடியை ஏற்றி வைத்து அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும். கடந்தாண்டுகளை போல சீட்டுகளுக்கான கூட்டணி வைக்கப்போவது இல்லை. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு இருந்தால் மட்டுமே கூட்டணி வைப்போம் என்றார்.
Advertisement
Advertisement