செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விபத்து: பேருந்தை பராமரிக்க கோரிக்கை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஓடும் அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விபத்துக்குள்ளன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி 212 பி என்கிற தடம் எண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்து செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆத்தூர் பகுதியை பேருந்து நெருங்கியபோது விபத்து ஏற்பட்டுருக்கிறது. அந்த விபத்தில் பேருந்து முன்பக்க டயர் கழண்டு விபத்தனது ஏற்பட்டுருக்கிறது. இந்த பேருந்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்த நிலையில் எந்த விபத்தானது ஏற்பட்டுருக்கிறது.
ஓட்டுனரின் சமத்தியத்தின் காரணமாக பெரும் அசபாவிதம் தடுக்கப்பட்டுருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர்தப்பினர்.
தொடர்ந்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அந்த பயணிகளை அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்து. ஓடும் அரசு பேருந்தில் முன்பக்க டயர் கழண்டு விபத்துக்கு உள்ளன சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.