கலவை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
*செயல் அலுவலர் ஆய்வு
Advertisement
கலவை : கலவை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை செயல் அலுவலர் நேற்று ஆய்வு செய்தார். கலவை பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் திட்டத்தில் காலை சிற்றுண்டி தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவர்களின் வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் (பொ) சீனிவாசன், தலைமை ஆசிரியை, சத்துணவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Advertisement