ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து அரசாணை வெளியீடு!!
சென்னை: ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை பெற்று பரிந்துரைகளை தர ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கே.என். பாஷா தலைமையிலான ஆணையம் 3 மாதங்களில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement