தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வு தொடக்கம்: 40,000 விண்ணப்பங்களுடன் சென்னை மாநிலக் கல்லூரி முதலிடம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. மொத விண்ணப்பத்தில் சென்னை மாநிலக்கல்லூரி, கோவை நந்தனம் உள்ளிட்ட 5 கல்லூரிகளுக்கும் சுமார் 70 சதவீதம் விண்ணப்பங்கள் குவிந்து கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட 11 கல்லூரிகள் உட்பட 180 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெருகிறது. 2 லட்சத்து 25 ஆயிரம் ,மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்ததில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். சென்னையில் உள்ள 8 கல்லூரிகளில் 10,400 இடங்களுக்கு மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். மாநில அளவிலான விண்ணப்ப பதிவில் சென்னை மணிலா கல்லூரி கோவை, நந்தனம் வியாசர்பாடி, திருச்சி ஆகியவை 1 லட்சத்து 56 ஆயிரத்து 971 விண்ணப்பங்களை பெற்று முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

மொத விண்ணப்பத்தில் இது 69.76 சதவீதமாகும். சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள 2380 இடங்களுக்கு 40 ஆயிரத்து 167 விண்ணப்பங்களும், கோவை அரசு கலை கல்லூரியில் 1727 இடங்களுக்கு 33757 விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. நடப்பு ஆண்டு முதல் இரு பாலர் கல்லூரியாக மாற்றப்பட்ட நந்தனம் அரசு கலை கல்லூரியில் 1430 இடங்களுக்கு 29,376 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரியில் 1086 இடங்களும் இடங்களுக்கு 29 ஆயிரத்து 275 விண்ணப்பங்களும் ,திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் உள்ள 1600 இடங்களுக்கு 24 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பி.எஸ்.சி கணினி அறிவியல் படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதை தொடர்ந்து பி.ஏ தமிழ், பி.காம், பி.ஏ ஆங்கிலம், பிபிஏ, பிஎஸ்சி வேதியியல் மற்றும் பி.ஏ பொருளாதாரம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. குறிப்பாக மாநில கல்லூரிக்கு மொத்தமாக வந்த 40 ஆயிரத்து 162 விண்ணப்பங்களில் பாதிக்கு மேல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிஎஸ்சி வேதியலுக்கே விண்ணப்பித்துள்ளனர். பொருளாதாரம், வரலாற்று ஆய்வுகள் அரசியல், அறிவியல் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் குவிந்ததால் மாநிலக்கல்லூரியிலிருந்த 1190 இடங்களை இரட்டிப்பாக 2380 இடங்களாக அதிகரித்தும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார். நந்தனம் கல்லூரி, ராணிமேரி கல்லூரியிலும் மாணவர்கள் அதிகம் விரும்பும் பாட பிரிவுகளில் கூடுதல் இடங்களை உருவாக்குபவதற்கு அந்தந்த கல்லூரிசார்பில் கல்வி இயக்ககத்திற்கு கோரிக்கை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.