தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோபிக்காரரை தனிமரமாக்க இலைக் கட்சி தலைவர் போட்டிருக்கும் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘போதை மாத்திரை பறிமுதல், கைது விவகாரத்தில் மக்கள் பாராட்டும் அளவுக்கு காக்கிகள் நடந்துக்கிறாங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடியில, போன வாரம் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்குல 15க்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்காங்க.. இதுல ஒரு பெண்ணும் கைதாகி இருக்குறாங்க.. அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில, திகார் சிறையில இருக்குற மகன் மூலமாக போதை மாத்திரை வாங்கி விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவலை சொன்னாங்க..

Advertisement

இதனால, திகார் சிறை காக்கியாக பணிபுரிஞ்சு வந்த அவரும் இப்ப கம்பி எண்ணிட்டு வர்றாரு.. காக்கிகள் நடத்திய தொடர் வேட்டையில, இப்ப மும்பையை சேர்ந்த பெண் உள்ளிட்டோரும் சிக்கியிருக்காங்க.. இவங்க, பள்ளி, கல்லூரிகளை குறி வெச்சி, சென்னை தொடங்கி மாநிலத்துல பல இடங்கள்ல போதை மாத்திரை சப்ளை செய்து வந்திருக்காங்க.. இதுல மேலும் சிலரை பட்டியலிட்டு போலீசார் கண்காணித்து பிடிக்கும் நடவடிக்கையில இறங்கி இருக்காங்க..

இதுல முக்கிய புள்ளிகள் சிக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.. சங்கிலி போல நீண்டு வரும் போதை விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது.. மாத்திரை பறிமுதல், கைது விவகாரம்னு அதிரடி நடவடிக்கையால, மக்கள் வெயிலூர் மாவட்ட காக்கிகளை பாராட்டி வர்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோபிக்காரரை தனி மரமாக்க இலைக்கட்சி தலைவர் திட்டம் போட்டிருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி ஆட்சியின்போது, தேனிக்காரர் முதல்வர் சீட்டில் இருந்த காலக்கட்டத்தில், சின்னமம்மிக்கு முதல்வர் ஆசையை தூண்டியவரே, தற்போதைய இலைக்கட்சி தலைவர் தானாம்.. இதனால் தேனிக்காரரை ராஜினாமா செய்யச்சொல்லி நெருக்கடி கொடுத்த நேரத்தில், அவரும் மம்மியின் சமாதியில் தர்மயுத்தத்தை தொடங்கியது எல்லாம் பழைய கதை.. முதல்வர் கனவில் இருந்த சின்ன மம்மியை, பரப்பனஅக்ரஹார ஜெயில் திடீரென அழைத்ததாம்..

இதனால் யார் முதல்வர் என்ற கேள்வியோடு கூவத்தூரில் கூடினாங்க.. அப்போது கோபிக்காரர் தான் லிஸ்டில் முதலிடத்தில் இருந்திருக்காரு.. அவரால் பணத்தை புரட்டமுடியாது என்பதால், தற்போதைய இலைக்கட்சி தலைவருக்கு முதல்வர் நாற்காலி கிடைச்சதா கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஆனால் இலைக்கட்சி தலைவரின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்த நிலைக்கு சென்ற நேரத்தில், மம்மி காலத்தில் கொடி கட்டி பறந்ததுடன், சிறையில் இருந்து வந்த சின்னமம்மி, தேனிக்காரர், குக்கர்காரர் போன்றோரை தூக்கி எறிஞ்சிட்டாராம்...

அவர்கள் அனைவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என கோபிக்காரர் திடீரென போர்க்கொடி தூக்கினாரு.. இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற இலைக்கட்சி தலைவர், அவரோட பொறுப்புகளை பறித்து ஷாக் கொடுத்தாரு.. இதனால் கோபிக்காரரின் கூட்டாளிகள் அனைவரும், பதவியை தூக்கி எறிஞ்சிட்டாங்க.. என்றாலும் 40க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவியை, இலைக்கட்சி தலைவர் பறித்ததோடு புதிய நிர்வாகிகளையும் நியமிச்சிட்டாராம்..

புதியவர்கள் எல்லோரும் இலைக்கட்சி தலைவரை சந்திச்சி நமஸ்காரம் செய்ய, சேலம் நெடுஞ்சாலை நகருக்கு வந்தாங்களாம்.. அவ்வாறு வந்தவர்களில் கோபிக்காரருக்கு மிகவும் நெருக்கமானவர்களும் இருந்திருக்காங்க.. இவர்கள் ரெண்டு பக்கமும் இருப்பவர்களாம்.. குறிப்பாக முழுமனதோடு இலைக்கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் இல்லையாம்.. இதில் முக்கிய நிர்வாகிகள் இலைக்கட்சி தலைவரை நம்பவில்லையாம்..

அதோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்புறாங்களாம்.. கோபிக்காரரின் பதவியை மட்டும் எடுத்தவர், ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை. இலைக்கட்சி தலைவரும், கோபிக்காரரும் வாய்திறந்து பேசுவதில்லை. ரெண்டுபேருக்கும் உள்ளே நெருங்கிய தொடர்பு இருப்பதால் தான், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதே நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், டெல்லியுடன் மிகுந்த நெருக்கத்தில் இருக்கும் கோபிக்காரரால் சிக்கல் எழும் என்பதால், இலைக்கட்சி தலைவர் அடக்கி வாசிக்கிறாரு..

அதனால் அவருடன் இருப்பவர்களை தள்ளி வைத்துவிட்டு, கோபிக்காரரை தனி மரமாக்கி முடக்கவும் திட்டம் வச்சிருப்பதாக இலைக்கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அதன்பிறகு டெல்லி அவரை திரும்பி பார்க்காது என்பது தான், இலைக்கட்சி தலைவரின் திட்டமாக இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த முரசு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை ஆசை வார்த்தை கூறி சமீபத்தில் தாமரை கட்சியினர் தங்கள் கட்சியில் இணைத்து கொண்டனர். தாமரை கட்சியில் இணைந்துள்ள அவருக்கு முக்கிய பொறுப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி வருகிறார்களாம்.

இதையே நம்பியுள்ள அந்த முக்கிய நபர் தாமரை கட்சியை சேர்ந்தவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு சில வேலைகளையும் செய்து வருகிறாராம். முக்கியமாக முரசு கட்சியில் உள்ள தனக்கு வேண்டிய நபர்களையும் தாமரை கட்சிக்கு இழுப்பதற்காக வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். இந்த தகவல் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உள்ள முரசு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement