தங்கம் விலை அதிரடி உயர்வு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 எகிறியது: நகை வாங்குவோர் அதிர்ச்சி
Advertisement
இந்நிலையில் கடந்த 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.53,328க்கு விற்பனையானது. தொடர்ந்து 4ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,960க்கு விற்கப்பட்டது. 5ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Advertisement