தங்கம் கடத்த உதவிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நாலரை கிலோ தங்கம் கடத்துவதற்கு கடத்தல்காரர்களுக்கு உதவி செய்த சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நாலரை கிலோ தங்கம் கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு சுங்கத்துறை இன்ஸ்பெக்டரான அனீஷை உதவி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அனிசை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அனீஷ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.