ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1080 சரிவு... ஒரு கிராம் ரூ.7,085-க்கும் சவரன் ரூ.56,680-க்கும் விற்பனை : நகை விரும்பிகள் உற்சாகம்!!
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது.அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,760க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனிடையே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 12 நாட்களில் ரூ.2.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.