ஒரே நாளில் 2 முறை ஏற்றம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1440 எகிறியது
சென்னை: தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு அதிரடியாக ரூ.1440 உயர்ந்தது. தங்கம் மார்க்கெட் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தொடங்கியது. அதில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,280க்கும் விற்றது. இதேபோல காலையில் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று மாலையும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. அதாவது தங்கம் விலை நேற்று மாலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11480க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91840க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளியும் நேற்று மாலையில் உயர்ந்தது. மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.