கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.90,000க்கு விற்பனை
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அதுவும் காலை, மாலை என ஒரு நாளைக்கு இரண்டு தடவை தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியது. தொடர்ந்து இம்மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், பவுனுக்கு ரூ.320 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் ரூ.90,800க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 168 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்றது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு ஆறுதலை அளித்துள்ளது. அதேபோல நேற்று வெள்ளியின் விலையும் குறைந்தது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும் விற்பனையானது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 164க்கு விற்பனை செய்யப்படுகிறது.