வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்தது
சென்னை: வாரம் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 22ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,040க்கும் விற்றது. இதேபோல, வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.172க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரம் தொடக்க நாளிலேயே தங்கம் விலை குறைந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதாவது, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும், பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.92,160க்கும் விற்றது. இதேபோல நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.171க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்றது.