சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை: நகை பிரியர்களுக்கு செம சான்ஸ்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9.180க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.73,440க்கும் விற்பனையானது. 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு 2000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது.
அதாவது, நேற்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,230க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,840க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் மீண்டும் குறைந்தது. அதாவது; தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து கிராம் ரூ.9,215க்கும், சவரன் ரூ.73,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.128க்கு விற்பனை செய்யப்படுகிறது.