தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்?
Advertisement
இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், நேற்று சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520-க்கு விற்பனையானது. இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.9105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.121 க்கு விற்பனை ரூ.1,21,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement