தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,310க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து பவுன் ரூ.90,480க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், பவுனுக்கு ரூ.320 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் ரூ.90,800க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் நேற்று விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 168 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement