சென்னை: கடந்த 17ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,840 ஆகவும், நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,880 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,170க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,360 ஆகவும் விற்க்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.