தங்கம் விலை 1 வாரத்தில் பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது
சென்னை: தங்கம் விலை கடந்த 8ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.75,760 என்று விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.75,560க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து வார தொடக்க நாளான கடந்த 11ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.75,000க்கும், 12ம் தேதி ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.74,360க்கும், 13ம் தேதி பவுனுக்கு ரூ.40 குறைந்து ஒரு பவுன் ரூ.74,320 ஆகவும் விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்த மாற்றம் இல்லாமல் ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9280க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.74,240க்கும் விற்பனையானது. ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.127க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.