தங்கம் விலை 6 நாட்களில் பவுனுக்கு ரூ.1,840 குறைந்தது
வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 280க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 150க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 200க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 வரை குறைந்துள்ளது.