சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.72,800க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,840க்கும் விற்றது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.124க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனையானது.