தங்கம் விலை சவரன் ரூ.160 சரிவு
Advertisement
தொடர்ச்சியாக கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 வரை உயர்ந்தது. இந்த தொடர்ந்து விலையேற்றம் நகை வாங்குவோரை கவலையடைய செய்து வந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால் அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்திருந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்கப்பட்டது.
Advertisement