தொடர்ந்து உயரும் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120க்கு விற்பனையாகிறது. காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,390க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.75,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 130 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே விலை இருந்தது. அந்தவகையில் கடந்த 23-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில், 25-ந்தேதி விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து காணப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 355-க் கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 390-க் கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.