தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு
Advertisement
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் உயர்வை தான் சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,155க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,240க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.127க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
Advertisement