தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி மாதம் கடைசி செவ்வாய் காரணமாக மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

நெல்லை: ஆடி மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. இன்றும், நாளையும் பல்வேறு கோயில்களில் கொடை விழாக்களை முன்னிட்டு வெள்ளாடுகள் விற்பனை அதிகரித்தது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள், சுடலைமாடசாமி, முண்டன், பட்டவராயன் உள்ளிட்ட கோயில்களில் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆடி மாதத்தில் முதல் செவ்வாய், முதல் வெள்ளி மற்றும் கடைசி செவ்வாய், கடைசி வெள்ளி ஆகிய தினங்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும். இத்தகைய கொடை விழாக்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளின் மறுதினமான புதன் அல்லது சனிக்கிழமைகளில் கிடா வெட்டு நடைபெறும். இதற்காக பக்தர்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஆட்டு சந்தைகளில் நேரடியாக சென்று வியாபாரிகளிடமிருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

அந்த வகையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடி மாதம் முழுவதுமே கிடாக்கள் விற்பனை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று ஆடிமாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கிடாக்களை வாங்கி சென்றனர். மேலும் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மேலப்பாளையம் சாலை முழுவதிலும் இன்று வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. செம்மறி ஆட்டு வகைகள் ஒரு ஜோடி ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளும், வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தாலும் ஆடி மாதத்தை முன்னிட்டு அவற்றின் விலையும் அதிகமாக இருந்தது.

குறிப்பாக வெள்ளாடுகளின் விலை மற்ற மாதங்களை விட கூடுதலாக இருந்தது. சந்தைக்கு வெளியே சாலையில் ேகாழிகள் விற்பனையும் களைக்கட்டியிருந்தது. கோயில்களில் சேவல்களை பலியிடுவோர், அதிகளவில் அவற்றை வாங்கி சென்றனர்.