ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு!
சென்னை: ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு நீடிக்க வேண்டுமா ? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனை குண்டாஸில் அடைத்ததை எதிர்த்து தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். கொடும் குற்ற செயல்களை செய்த ஞானசேகரனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது - போலீஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதன் வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆணையிட்டார்.
Advertisement
Advertisement