தோழி விடுதிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
சென்னை: சென்னை பல்கலைக்கழகம் வளாகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்ட தடை கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தோழி விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி எம்.ஏ. படிக்கும் மாணவர் நவீன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை ரூ.10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement