தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி பற்றி தகவல் தெரிவிக்க தொடர்பு எண்: காவல்துறை வெளியிட்டது

கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை ஒரு மர்ம நபர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக, அக்குற்றவாளியை பிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தெரிவிக்க இன்று மாவட்ட காவல்துறை தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியை, ஒரு மர்ம நபர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்து 9 நாட்களாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் கூறுகையில், குற்றவாளியை பிடிக்க காவல்துறை சார்பில் முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Advertisement

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான குற்றவாளியின் புகைப்படம் மற்றும் புதிய சிசிடிவி காட்சிகளை இன்று காலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டு, குற்றவாளியைப் பிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மேலும், குற்றவாளி பற்றிய தகவல் தெரிந்தால், அவற்றை 9952060948 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement