தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலுக்கட்டாயமாக கடத்தி சென்று கரும்பு தோட்டத்தில் சிறுமி பலாத்காரம்: கர்நாடகாவில் பயங்கரம்

பெலகாவி: கர்நாடகாவில் 13 வயது சிறுமியை கரும்பு காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 13 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர். அங்கு அந்தச் சிறுமியைச் சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி முர்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் மணிகண்டா தின்னிமணி மற்றும் ஈரண்ணா சங்கம்மனவர் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

Advertisement

இந்நிலையில், தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேட் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. கைதான இருவரில் ஒருவன் வன்கொடுமையில் ஈடுபட்டதும், மற்றொருவன் யாருக்கும் தெரியாமல் இருக்க காவல் காத்து நின்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்தே சிறுமி புகார் அளித்துள்ளார்; இருப்பினும், இந்தத் தாமதம் வழக்கின் விசாரணையைப் பாதிக்காது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்துள்ளார்.

Advertisement