தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபருக்கு 6 வயது சிறுமி திருமணம்: பல்வேறு தரப்பினர் கண்டனம்

Advertisement

காபூல்: தெற்கு 45 வயது நபருக்கு, ஆறு வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான் ஆட்சிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு வரை ஆண்களுக்கு 18, பெண்களுக்கு 16 வயதுக்குள் திருமணம் செல்லாது என சிவில் சட்டம் இருந்தது. ஆனால் தற்போது, இஸ்லாமிய சட்டத்தின் பெயரில் குறைந்தபட்ச திருமண வயதைக் கூட நிர்ணயிக்காமல் விட்டுள்ளனர். யுனிசெஃப் வெளியிட்ட தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் 57% பெண்கள் 19 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 21% பெண்கள் 15 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தானின் மர்ஜா மாவட்டத்தில் 45 வயது நபருக்கு, 6 வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இதனிடையே சிறுமியின் திருமணத்திற்காக அந்தக் குழந்தையின் தந்தைக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதன்பேரில், அந்தச் சிறுமியை அவரிடம் தந்தையே விற்றுள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுமியை அவர் கட்டாயம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாலிபன்கள் அந்தச் சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர்.

சிறுமிக்கு 9 வயதானதற்குப் பிறகு அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாய் இருந்த மணமகனையும், சிறுமியின் தந்தையையும் கைது செய்தனர். எனினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Related News