கிப்ட்ஸ்.காம்
பண்டிகைக் காலம் இப்போதெல்லாம் அன்பளிப்புகள் கொடுக்கும் வழக்கம் , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காகவே விதவிதமான அன்பளிப்புகள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு தான் உதவுகிறது ‘‘கிஃப்ட்ஸ்.காம்: கஸ்டம் கிஃப்ட்ஸ் செயலி’’ (Gifts.com: Custom Gifts App) ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தனித்துவமான கஸ்டம் பரிசுப் பொருட்கள் வழங்குகிறது. பிடித்த பொருளை, பிடித்தமானவர்களுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொடுக்கலாம், அல்லது பெயர்கள் பொறித்து வாங்கலாம். உதாரணத்திற்கு பர்ஸ், பெல்ட், ஹேண்ட்பேக், போட்டோக்கள் என பெயர்கள், புகைப்படங்கள் பொறித்து பிரத்யேகமாக வடிவமைத்துப் பெறலாம். மேலும் ஆண்களுக்குத் தனியாக, பெண்களுக்குத் தனியாக, பிரிக்கப்பட்டு அன்பளிப்புகள் உள்ளன. மேலும் பிறந்தநாள், திருமணநாள், சிறப்பான நாட்கள், பண்டிகைகள் என அனைத்திற்கும் அன்பளிப்புகள் வாங்கலாம். அத்தனையும் கஸ்டமைஸ்ட் பொருட்கள்.