ஜெர்மனியில் தமிழர்களின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஜெர்மனி: ஜெர்மனியில் தமிழர்களின் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று (ஆகஸ்ட் 31) ஜெர்மனிக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழர்கள் வரவேற்ற புகைப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன்'' என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.