ஜெர்மனியில் தொழில் ஒத்துழைப்பு குறித்து வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா அதிபருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கான 8 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று டசெல்டோர்ப் நகரில் உள்ள வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநில அதிபர் அலுவலகத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் ஆகியோரை சந்தித்து பேசினார்.
Advertisement
இந்த சந்திப்பின்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் 4.0, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட்டையும், அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை கொண்ட குழுவினையும் தமிழ்நாட்டிற்கு வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
Advertisement