செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 'துபாய், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனெவே முதலீடுகளை ஈர்க்க சென்றேன். வெளிநாடு பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் வந்துள்ளன. இதுவரை ரூ.10 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும்' எனவும் முதல்வர் கூறியுள்ளார்.