நாளை முதல் ஒரு வாரம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னையில் என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; என்.ஆர்.இளங்கோவின் வாதத் திறமையை பார்த்துதான் கலைஞர் அவருக்கு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பு தந்தார். தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பீகாரின் நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது. திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருப்படம் திறக்கப்பட உள்ளது. நாளை முதல் ஒரு வாரம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். எனது வெளிநாட்டு பயண திட்டம் குறித்து நாளை செய்தியாளர்களிடம் விளக்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement