புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு லோகோ வெளியீடு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடும் மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்ததன் அடுத்த கட்ட நிகழ்வாக அதற்கான லட்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய்காந்தி வெளியிட, மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் சேகர் பெற்றுக்கொண்டார்.
Advertisement
Advertisement