பொத்தாம் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: மழைநீர் வடிகால் பணிக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் காவல் நிலையத்தில் புகார் தரலாம் என்று மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணியின்போது பள்ளங்களில் விழுந்து இறந்த நபர்களின் விவரங்கள் இல்லை. எனவே பொத்தாம் பொதுவாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. சென்னையில் மழைநீர் வடிகால் பணி பாதுகாப்பு இல்லாமல் நடப்பதாக ஸ்டாலின் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
Advertisement