'ஜென் இசட்' இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி: ராணுவ தளபதி உபேந்திர திவேதி!
டெல்லி: 'ஜென் இசட்' இளைஞர்கள் இந்தியர்வின் மிகப்பெரிய சக்தி என ராணுவ தளபதி உபேந்திர திவேதி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேரடித் தொடர்பு இல்லாத வகையில் போரை எதிர்கொள்ளும் சூழல் அதிகரித்து வருவதாக கூறினார். ராணுவத் தளவாடங்களின் வலிமையைவிட தொழில்நுட்பதிறனின் வலிமையும் போர்ச்சுழலில் தேவைப்படுவதாக கூறினார்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65% -க்கும் மேற்பட்டோர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளதாகவும். இந்தியா இளைஞர்களின் தேசமாக திகழ்வதாகம் பெருமிதமாக தெரிவித்தார். 'ஜென் இசட்' இளைஞர்கள் எனப்படும் 1990 முதல் 2010 வரையில் பிறந்த இளைஞர்கள் ராணுவத்தில் உள்ளதகவும் ராணுவ தளபதி குறிப்பிட்டார். உலக நாடுகளின் ராணுவ பலத்தில் இரண்டாவது இடத்தில உள்ள இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கை முதலிடத்தில் உள்ளதாகவும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி குறிப்பிட்டார்.