ஜென் Z-ன் கிரிஞ்ச் பிரபலமானது போல '67' வைரல்: சிக்ஸ் செவன் என ரீங்காரமிடும் சிறுவர்கள்!
வாஷிங்டன்: டிக்ஷனரி.காம் என்ற பிரபல இணையதளம் 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக '67' என்பதை தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆல்பா தலைமுறையினர் குதுகளமாக உச்சரிக்கும் 67 என்பது அவர்களது மொழியின் ஒரு அங்கமாகவே மாறியது பேசு பொருளாகியுள்ளது. 2010-2024ஆம் இடையில் பிறந்த ஆல்பா தலைமுறையினர் 67 என்ற எண்ணை தங்களது பேச்சு வழக்கு சொல்லாகவே மாற்றி வைத்துள்ளனர். ஜென்சி தலைமுறையினால் கிரிஞ்ச்என்ற சொல் பிரபலமானது போல் பேசும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும் குறிப்பிட்ட அர்த்தமே இல்லாத 67 என்ற சொல் இணையத்தில் ட்ரெண்டாக உள்ளது.
67 என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழம்பிப்போய் உள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள சில பள்ளிகளில் இந்த சொல்லை பயன்படுத்த தடைவிதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. உற்சாகத்தின் போதும் வயதில் மூத்தவர்களை கிண்டல் செய்யவும் ஜென் ஆல்பா சிறுவர்கள் 67 சொல்லை பயன்படுத்துகின்றனர். கடந்து ஆண்டு வெளியான அமெரிக்க ராப் பாடகர் ஸ்கிரிலாவின் டூட் டூட் என்ற பாடலில் இடப்பெறும் 67 என்ற சொல்லே ட்ரெண்டிங்கிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க கூடை பந்தாட்ட வீரர் லாமேலோ பாலின் உயரமான 6 ஆதி ஏழு அங்குலம் என்பது 67 வைரல் ஃபைவரில் இடம்பெற்றது. அந்த 67க்கு தனக்கு அர்த்தம் தெரியாது என பேட்டி ஒன்றில் லாமேலோ கூறினார். உணவகத்தில் 67வது ஆர்டர் டெலிவரி வருவரை ஊழியர் மைக்கில் அறிவிக்கும் காட்சி கூட அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தைக்கான தேர்வு பட்டியலில் ஆரா ஃபார்மிங் சுங்கவரி உட்பட பல சொற்கள் இடம்பெற்றிருந்தலாம் 67 என்பதை டிக்ஷனரி.காம் தேர்வு செய்தது. இது மொழி சிதைவுக்கு வழிவகுக்கும் என போர்க் கொடி தூக்கியுள்ள மொழி ஆர்வலர்களின் முகத்திற்கு எதிராக ஆல்பா தலைமுறையினர் 67 என ரீங்காரமிட்டு வருகின்றனர்.
