தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இடையூறு; 5 அதிமுக எம்எல்ஏ உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 4 எம்.எல்.ஏ..க்கள் மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த திட்டம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்டது என அதை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ

Advertisement

தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அ.தி.மு.க.வினர் உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அப்போது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக நிகழ்ச்சி நடத்தியதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆகியோர் மீதும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 75 பெண்கள் உட்பட 400 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அதேபோல கோல்டுவின்ஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பீளமேடு போலீஸ் நிலையத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி அருண்குமார் உட்பட 405 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement