தி ஹேக்: கடந்த 7 மாதங்களாக நடந்து வரும் போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் போராளிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதை தொடர்ந்து 7 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் போர் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட், ஹமாஸ் தலைவர்கள் யாஹ்யா சின்வர், முகமது டெய்ப், இஸ்மாயில் ஹனியே ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.